Skip to main content

ரூபாயின் மதிப்பு 20 பைசா உயர்வு

May 8, 2012 ஆக்கம் senthilkumar

அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 20 பைசா உயர்ந்து, ரூ.52.71 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டு இருக்கிறது. பொது வரி தவிர்ப்பு எதிர்சட்டம் ஓராண்டு காலத்திற்கு தள்ளிவைக்கப்பட்டதையடுத்து, ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரித்து டாலரின் மதிப்பை கட்டுபடுத்தும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து அதிக டெபாட்டுகளை ஈர்க்கும் வகையில், இவ்வகை டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களிய உயர்த்தியுள்ளது. சென்ற இரண்டு மாதங்களில் மட்டும் டாலருக்கு எதிரான் ரூபாயின் மதிப்பு 9% வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 56 பைசா உயர்ந்து, 52.91 என்ற விலையில் முடிவுற்றது குறிப்பிடதக்கது.

தொடற்புடைய செய்திகள்

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.