
நடப்பு காபி பருவத்தில் (அக்.,-செப்.,), அளவின் அடிப்படையில், காபி ஏற்றுமதி, ஜூலை வரையிலான 10 மாத காலத்தில், 2.85 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, முந்தைய பருவத்தின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 6.8% குறைவு என, காபி வாரியம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், மதிப்பின் அடிப்படையில், காபி ஏற்றுமதி, 3% உயர்ந்து, 4,225 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சர்வதேச காபி உற்பத்தியில், இந்தியா 4.5% பங்களிப்பை கொண்டு, ஐந்தாவது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. நாட்டின் மொத்த காபி உற்பத்தியில், 70 - 80% ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய காபி ஏற்றுமதிக்கு இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகள் முக்கிய சந்தைகளாக திகழ்கின்றன.
| senthilkumar சொல்வது, வரி சேமிப்பு அளிக்கும் திட்டம் (1 year 49 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, ஹவாலா பணம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| இராசமோகன் சொல்வது, மியூச்சுவல் நிதி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (1 year 51 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மியூச்சுவல் ஃபண்ட் (1 year 51 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, Buy Back (2 years 1 week முன்பு) |
| tamilreporter2 சொல்வது, கோல் இந்தியா (2 years 26 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, பவர் கிரீட் (2 years 26 வாரங்கள் முன்பு) |