மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? அதன் நோக்கம்?
| senthilkumar சொல்வது, வரி சேமிப்பு அளிக்கும் திட்டம் (1 year 49 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, ஹவாலா பணம் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| இராசமோகன் சொல்வது, மியூச்சுவல் நிதி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மொத்த உள்நாட்டு உற்பத்தி (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, மியூச்சுவல் ஃபண்ட் (1 year 50 வாரங்கள் முன்பு) |
| senthilkumar சொல்வது, Buy Back (2 years 1 week முன்பு) |
| tamilreporter2 சொல்வது, கோல் இந்தியா (2 years 26 வாரங்கள் முன்பு) |
| tamilreporter2 சொல்வது, பவர் கிரீட் (2 years 26 வாரங்கள் முன்பு) |
Comments
மொத்த உள்நாட்டு உற்பத்தி
May 27, 2011 ஆக்கம் senthilkumar, 1 year 50 வாரங்கள் முன்பு
விமர்சனம்:77
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு என்பது, ஒரு குறிப்பிட்ட ஆண்டில், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான பொருள்கள் (தொழில் துறை + வேளாண் துறை) மற்றும் அளிக்கப்படும் சேவைகளின் சந்தை மதிப்பு ஆகும். ஒரு தனிநபரின் அந்தஸ்து அவரது ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதேபோன்று ஒரு நாட்டின் பொருளாதார வலிமை அந்நாட்டின் ஜி.டீ.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்து கணக்கிடப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அடிப்படையில் ஆசியாவில் தற்போது நம் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியாகும். பொருளாதார வளர்ச்சி வேகத்தில், உலக அளவில் சீனா முதலிடத்திலும், நம் நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன.