Skip to main content

பைனான்ஸ் கிளப்

பைனான்ஸ் கிளப் ஏன்?

இந்தியாவில் நிதி குறித்த அறிவு குறைவாக உள்ள நிலையில் தொழில்துறை சார்ந்த  நிபுணர்கள் தங்களது அறிவை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதிலும், முதலீடு செய்யும் மக்களுக்கு அதுகுறித்த அறிவை அளித்து அவர்கள் எண்ணிக்கையை இந்தியாவில் அதிகரிப்பதிலும் இந்தியா பைனான்ஸ் பஜார் .காம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கிளப், நிதிதுறை சார்ந்த அறிவை வழங்குவதோடு நின்று விடாமல் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு, நிதி சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பல்வேறு பட்டறைகள் நடத்துவதன் மூலம் புதிய முதலீட்டாளர்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளை சரியாக புரிந்து கொள்ளும் முதலீட்டாளர்களை உருவாக்குவதிலும் இந்த கிளப் முக்கிய பங்காற்ற உள்ளது. 

பைனான்ஸ் கிளப்பில் யாரெல்லாம் உறுப்பினராகலாம்?

கணக்கு தணிக்கையாளர், செலவு தணிக்கையாளர், கம்பெனி செயலாளர்கள், வழக்கறிஞர்கள், வரி ஆலோசகர்கள், தொழில் ஆலோசகர்கள், முதலீட்டு பரிந்துரையாளர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், தணிக்கை நிறுவனங்கள், சட்ட சேவை நிறுவனங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச்சந்தை நிறுவனங்களில் மக்கள் தொடர்பு அலுவலர்கள், பட்டியலிடப்படாத நிறுவனங்கள், ஓழுங்குமுறை மற்றும் நியமன ஆணையங்களில் இருந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ்.,வங்கிகள், பரஸ்பர சகாய நிதி நிறுவனங்கள், காப்பீட்டு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் நிதி சார்ந்த சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள்.

உறுப்பினர்கள் தங்களது அறிவையும், சேவையையும் கிளப்பின் மற்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி?

அனைத்து உறுப்பினர்களும், தேசிய மற்றும் சர்வதேச நிதி துறை சார்ந்த நிகழ்வுகள், சம்பவங்கள் தொடர்பான தங்கள் எண்ணங்களையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அறிவு பகிர்வு மற்றும் அறிவு பெறுதல் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்கலாம். தனிப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் நிபுணர்களின் சேவையை பெறுவதன் மூலம் தங்களது திறன் மற்றும் தொழில் நடவடிக்கைகளை பெருக்கிக் கொள்ளலாம். கார்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனங்கள்,தனி நபர்கள் முதலீடுகளை மேற்கொள்ளும் பொருட்டு தங்கள் தொழில் மேம்பாடு மற்றும் தொழில் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

பைனான்ஸ் கிளப் தவிர வேறு என்ன பயன்னை உறுப்பினர்கள் பெற முடியும்?

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனை உருவாக்க முடியும்., இதற்கு அடுத்தபடியாக, நாம் பணத்தை கையாளுகிறோம். எனவே இந்த துறையில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்கள் புதியவர்களை புரிந்து கொள்வதுடன், அவர்களை பரிவுடன் கையாள வேண்டும்.அனைத்து உறுப்பினர்களும் ஆன் லைன் வசதியை பயன்படுத்தி அறிவு திறனை பகிர்ந்து கொள்வதுடன், மாதிரி முதலீடு போன்றவற்றின் மூலம் கட்டணம் ஏதுமின்றி அறிவை பெருக்கிக் கொள்ள  கிளப் வாய்ப்பு வழங்குகிறது.

பைனான்ஸ் கிளப்பில் உறுப்பினராக நடைமுறைகள்

இது மிக, மிக எளிதான நடைமுறையே; எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து உள்நுழைவதன் மூலம், நாங்கள் உங்களுக்கு, பயன்படுத்தும் முகவரி மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகியவற்றை வழங்குகிறோம். இதன் மூலம் உங்களது நிதி அனுபவம், உங்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, நிதி புள்ளி விவரங்கள், தொழில் மேம்பாட்டு தகவல்கள், உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பயனளிக்கும் நிதித்துறை சார்ந்த இதர தகவல்கள்  போன்றவை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முடியும்.

Individual Enrollment Form

Corporate Enrollment Form

Consulting Firm Enrollment Form

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.