Skip to main content

நிதி மற்றும் வங்கி செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களின் டெபாசிட் 19% வளர்ச்சி

May 18, 2013 ஆக்கம் senthilkumar

சென்ற 2012-13ம் நிதியாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட், 19 சதவீதம் உயர்ந்து, 1,418 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 1,192 கோடி டாலராக இருந்தது. வெளிநாடு வாழ் இந்தியர்கள், என்.ஆர்.இ., மற்றும் என்.ஆர்.ஓ., பிரிவுகளின் கீழ், இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர். வங்கிகள், என்.ஆர்.இ., டெபாசிட்டுகளுக்கும், உள்நாட்டு டெபாசிட்டுகளும் ஒரே சதவீத வட்டியை வழங்குகின்றன.

பீ.எஸ்.இ. 500 நிறுவனங்களில் அன்னிய முதலீடு உயர்வு

May 18, 2013 ஆக்கம் senthilkumar

பீ.எஸ்.இ. 500 பட்டியலில் உள்ள நிறுவனங்களில், ஜனவரி–மார்ச் மாத காலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு உயர்ந்துள்ளது. பீ.எஸ்.இ. 500 நிறுவனங்கள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் 93 சதவீத பங்கினை கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நாட்டிலுள்ள 20 முக்கிய துறைகளில் செயல்பட்டு வருகின்றன.

நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் அன்னிய முதலீடு 15% வரை அதிகரிப்பு

May 18, 2013 ஆக்கம் senthilkumar

கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி–மார்ச்) ‘மிட்கேப்ஸ்’ எனப்படும் நடுத்தர நிறுவனங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு மூலதன அளவு 15% வரை அதிகரித்துள்ளது. 2012 டிசம்பர் மாத நிலவரப்படி ஸ்ரனுஜ் – கோ என்ற நடுத்தர நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு மூலதன அளவு 0.28 சதவீதமாக இருந்தது. இது மார்ச் 31–ந் தேதி நிலவரப்படி 16.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஜே.பி. பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் இந்த பங்கு மூலதன அளவு 1.54 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாகவும், ஜி.டி.எல். இன்ஃப்ரா நிறுவனத்தில் 2.62 சதவீதத்திலிருந்து 8.02 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

மறைமுக வரி வசூல் 3.3% உயர்வு

May 17, 2013 ஆக்கம் senthilkumar

ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் மறைமுக வரி வசூல் 3.3 சதவீதம் உயர்ந்து ரூ.33,684 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சுங்க வரி வசூல் மட்டும் 12.8 சதவீதம் அதிகரித்து ரூ.13,083 கோடியாக உயர்ந்துள்ளது. சேவை வரி வசூல் 13.6 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.10,712 கோடியாக உள்ளது. எனினும் கலால் வரி வசூல் 14 சதவீதம் சரிந்து ரூ.9,889 கோடியாக குறைந்துள்ளது. இது, 2012 ஏப்ரல் மாதத்தில் ரூ.11,590 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் கலால் வரிகள் மூலம் ரூ.1.96 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, மொத்த மறைமுக வரி வசூலில் 10.9 சதவீதமாகும்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 18% வளர்ச்சி

May 16, 2013 ஆக்கம் senthilkumar

இந்தியாவிலுள்ள 43 பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துமதிப்பு, ஏப்ரல் மாதத்தில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 18% அதிகரித்து ரூ.8.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் நிகர லாபம் ரூ.380 கோடி

May 15, 2013 ஆக்கம் senthilkumar

ஸ்டேட் பேங்க் ஆஃப் ஐதராபாத், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.380 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் (2011–12) இதே காலாண்டில் ரூ.481 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 21 சதவீதம் சரிவடைந்துள்ளது. நிகர வட்டி வருவாய் 4.7 சதவீதம் குறைந்து ரூ.1,052.60 கோடியிலிருந்து ரூ.1,003 கோடியாக குறைந்துள்ளது. இவ்வங்கி, சென்ற நிதி ஆண்டில் ரூ.1,250 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டில் ரூ.1,298 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 3.7 சதவீதம் குறைந்துள்ளது.

பாங்க் ஆஃப் இந்தியா லாபம் ரூ. 2,749 கோடி

May 14, 2013 ஆக்கம் senthilkumar

பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியா மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ. 2,749 கோடி லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின்மொத்த வர்த்தகம் 18.5 சதவீதம் அதிகரித்து ரூ. 6.75 லட்சம் கோடியை எட்டியதாக வங்கியின் தலைவர் விஜயலட்சுமி ஆர். ஐயர் தெரிவித்தார்.

தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை

May 14, 2013 ஆக்கம் senthilkumar

தங்கம் இறக்குமதிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, தங்க நகை ஏற்றுமதியாளர்களின் உண்மையான தேவைக்கேற்ப, வங்கிகள் தங்கத்தை ஒரு தொகுப்பாக, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை, ஒரு தொகுப்பாக, அதாவது ரொக்கத்திற்கு மொத்தமாக இறக்குமதி செய்து கொள்ள, குறிப்பிட்ட வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இத்துடன், பரஸ்பரம் கடன் அடிப்படையிலும் தங்கத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம்.

அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.7,500 கோடி முதலீடு

May 14, 2013 ஆக்கம் senthilkumar

நடப்பு மே மாதத்தில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 7,500 கோடி ரூபாயை (140 கோடி டாலர்) முதலீடு செய்துள்ளன. குறிப்பாக, நடப்பு மாதம் 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டு மொத்த அளவில், 22,829 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதேசமயம், 15,306 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐ.டி. துறை பங்குகளில் பரஸ்பர நிதி துறை முதலீடு உயர்வு

May 13, 2013 ஆக்கம் senthilkumar

மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மார்ச் மாதத்தில் சாஃப்ட்வேர் துறை நிறுவனங்களின் பங்குகளில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீடு ரூ.19,196 கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்கு மாதங்களாக இந்த முதலீடு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.