நடப்பு 2013 ஆம் ஆண்டின், முதல் இரண்டு மாதங்களில்(ஜன.,- பிப்.,), நாட்டின் தேயிலை உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 5.54% வளர்ச்சி கண்டுள்ளது என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், அசாம் மாநிலத்தின் தேயிலை உற்பத்தி, 2.30 லட்சம் கிலோ அதிகரித்து, 8.30 லட்சம் கிலோவாக உயர்ந்துள்ளது. அதேசமயம், மேற்குவங்கத்தில், இதன் உற்பத்தி, 4.70 லட்சம் கிலோ சரிவுடைந்து, 25.30 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது. ஒட்டு மொத்த அளவில், வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி, 1.60 லட்சம் கிலோ குறைந்து, 34.50 லட்சம் கிலோவாக சரிவடைந்துள்ளது.