Skip to main content

முதலீட்டு வாய்ப்புகள்

April 18, 2012 ஆக்கம் senthilkumar

முதலீட்டு வாய்ப்புகள்

(எஸ்.கோபாலகிருஷ்ணன் - Formerly Deputy General Manager, Central Bank of India)

ஒருவர் வெளிநாட்டில் நிரந்தரமாக செட்டில் ஆவது எப்படி?

கீழ்காணும் ஏதேனும் ஒரு வழி மூலம் வெளிநாட்டில் நிரந்தரமாக குடிமகனாகலாம்.

1) பணியில் நியமனம்

2) திருமணம்

3) முதலீடு செய்வதன் மூலம்

4) பிறப்பின் அடிப்படையில்

5) ஸ்பான்சர்ஷிப் (ரத்த உறவுகளுக்கு மட்டுமே ஸ்பான்சர்ஷிப் பொருந்தும்)

ஸ்பான்சர் ஷிப் படிவங்களை எங்கிருந்து, எப்படி பெறுவது?

எந்த நாட்டில் குடியேற விரும்புகிறீர்களோ அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலிருந்து ஸ்பான்சர் ஷிப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த படிவங்களை ஸ்பான்சர் செய்பவரே பூர்த்தி செய்திட வேண்டும். இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட வெளிநாட்டின் தூதரகத்தில், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள், இது தொடர்பான மேற்கொண்டு நடவடிக்கையை எடுப்பார்கள்.

ஸ்பான்சர் ஷிப்பிற்குத் தேவையான ஆவணங்கள் எவை?

1) உள்ளாட்சி அலுவலகம் வழங்கிய பிறப்பு சான்றிதழ்

2) திருமணம் செய்துகொண்டவர்கள், அதற்கான சட்டப்படியான திருமண சான்றிதழ்

3) பணிபுரிவதற்கான சான்றிதழ்

4) ஆட்சேபனை இல்லை எனக்கூறும் சான்றிதழ் (பணிபுரியும் அலுவலகம் வழங்கியது)

5) பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தால், சம்பந்தபட்ட அலுவலகம் வழங்கிய பணி ஓய்வு சான்றிதழ்.

இவற்றை இணைத்து, வெளிநாட்டில் குடியேறுவதற்கான படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு மருத்துவ சான்றிதழ் தேவையா?

ஆம், இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தூதரகத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவரிடம் இருந்து மருத்துவ சான்றிதழ் பெற்று அனுப்ப வேண்டும். மருத்துவ பரிசோதனை, சிறுநீர், ரத்தம், மலம், நெஞ்சு பகுதி எக்ஸ்ரே, பொதுசுகாதாரம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அனுமதி கிடைத்த பிறகு, வெளிநாட்டுப் பயண சீட்டு வாங்குவதற்கு ஏதேனும் ஆவணங்கள் தேவையா?

பாஸ்போர்ட், மருத்துவ சான்றிதழ், இமிக்ரேஷன் சான்றிதழ், விசா மற்றும் வருமானவரி செலுத்தியாகிவிட்டது என்பதற்கான சான்றிதழ் காட்டினால், பயண சீட்டு வழங்கிவிடுவார்கள்.

ஒரு என்.ஆர்.. தனக்கு குடும்பப் பாகப்பிரிவினை மூலம் கிடைத்த வீட்டை விற்று, அந்த பணத்தை வெளிநாட்டுக்கு எடுத்து செல்ல முடியுமா?

பாரத ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று எடுத்து செல்லாம். அத்துடன் வருமான வரி முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டது என்பதற்கான சான்றிதழை, வருமான வரி அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.