Skip to main content

யூகோ பேங்க் வட்டி வருவாய் 25% வளர்ச்சி

May 7, 2012 by senthilkumar

யூகோ பேங்க், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 253 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், ரூ.226 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 844 கோடியிலிருந்து, 1,051 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வங்கியின் நிகர லாபம், 24 சதவீதம் (333 கோடி ரூபாய்) சரிவை கண்டுள்ளது.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.