Skip to main content

அல்ட்ராடெக் நிறுவனத்தின் நிகர லாபம் 19% உயர்வு

April 25, 2012 by senthilkumar

இந்தியாவின்  மிகப்பெரிய சிமெண்டு நிறுவனமான அல்ட்ராடெக், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.867 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டை விட 19% அதிகமாகும். இதே காலாண்டுகளில் நிகர விற்பனையும் 19 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.5337 கோடியாக உயர்ந்துள்ளது. அல்ட்ராடெக் நிறுவனம் ஆண்டுக்கும் 5.2 கோடி டன் சிமெண்டு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மூலப் பொருள்கள் மற்றும் எரிப் பொருளுக்கான செலவினம் உயர்ந்து வருவதால் இனி வரும் காலாண்டுகளில் சிமெண்டு நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்படலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில், சிமெண்டு உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. நம் நாட்டில் நடப்பு நிதியாண்டில் சிமெண்டுக்கான தேவைப்பாடு 7-8% உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.