வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் வாய்ப்பு உள்ளதா?
கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இப்போது வங்கி டெபாசிடுக்கான வட்டி விகிதம் கூடுதலாக உள்ளது. ஏறக்குறைய 9.5 முதல் 10 % ஆக உள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து இருந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி பல முறை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. 'ரெப்போ' விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம். இதனால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனி நபர்கடன், தொழில், சிறுதொழில் குறுந்தொழில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்தது. இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளை திரட்டுவதற்கு ஏதுவாக, டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.
தற்போது, பணவீக்கம் ஒரு கட்டுக்குள் வந்துள்ளது. இனி வரும் மாதங்களில் ரெப்போ ரேட் உயராது. மாறாக, குறையும். அப்படி குறையும் போது வங்கி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. உடனடியாக வங்கியின் டெபாசிட் செய்ய விரும்புபவர்கள் மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டுகள் என நீண்ட கால அடிப்படையில் டெபாசிட் செய்வது நல்லது. தற்போதைய, உயர்ந்த வட்டி விகிதத்தின் பலனை நீண்ட காலத்துக்கு அனுபவிக்கலாம்.
| ursulaN says, Personal finance is the (10 weeks 4 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, Budgeting Tips (16 weeks 2 days ago) |
| cbhattarai says, reply (16 weeks 2 days ago) |
| veronicaD says, Loans recently provides us (20 weeks 21 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| Ramalingam K says, With proper tax planning you (21 weeks 20 hours ago) |
| cbhattarai says, Paying tax in advance is (21 weeks 23 hours ago) |