X
Skip to main content

Insurance Companies

February 9, 2012 by senthilkumar

அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளில் அண்மைக் காலமாக இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பிரச்சனை வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதுபோல் நம் நாட்டில் எல்..சி. கும் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறதா?

நிச்சயமாக வாய்ப்பு இல்லை. எல் ஐ. சி. யைப் பற்றிய அச்சம் வேண்டவே வேண்டாம். இந்தியாவில் பொது மக்களின் பணத்தை சேமிப்பை கையாளும் நிறுவனகளுக்கு என்று தனித் தனியாக வெவ்வேறு கண்காணிப்பு ஆணையங்கள் இருக்கின்றன. அதாவது முழுமையான அதிகாரங்கள் கொண்ட அமைப்புகள். உதாரணத்துக்கு, வங்கிகளை கண்காணிக்க பாரத ரிசர்வ் வங்கி, பங்கு சந்தைக்கு செபி. அதுபோல், காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஐ என்னும் அரசு சார்ந்த அமைப்பு எல் ஐ சி மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை கண்காணிக்கின்றன. பிரிமியமாக வசூல் செய்யும் பணத்தை இன்சூரன்ஸ் கம்பெனி எந்த வகையில் முதலீடு செய்யலாம் என்பது போன்ற, அனைத்து செயல்பாடுகளுக்கும் விதிமுறைகளை வகுத்துள்ளது ஐஆர்டிஐ.

இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருந்த நுற்றுக்கணக்கான தனியார் ஆயுள் காப்பீட்டு கம்பெனிகள் அனைத்தையும் 1956 ஆம் ஆண்டு, பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தேசிய மயமாக்கப்பட்டது.

அது தவிர எல் ஐ சி ஒரு மத்திய அரசு நிறுவனம். எனவே, அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஏற்பட்ட இடர்பாடு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.

New Forum Topics

This site is best viewed in Internet Explorer 7 and above, Google Chrome 16.x and above, Mozilla Firefox 8.x and above.